world

img

3 பேருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவர்களுக்கும், அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்த மேரி இ. பிரன்கோவ் மற்றும் பிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தியின் புறத் தாங்குதிறன் (Peripheral Immune Tolerance)தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மற்றும் தாங்குதிறன் நோய்கள் (Autoimmune diseases) போன்றவற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் புதிய வழிமுறைகளின் வளர்ச்சிக்கு இந்த கண்டுபிடிப்புகள் தூண்டுகோலாக அமைந்துள்ளதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.